புதன், 11 ஏப்ரல், 2012

காதலர் தினம் கவிதைகள்

                              (1)

காதலர் இதயம் இரண்டும் 
இடம் மாறின. 
மருத்துவ அறிவியல் 
மலைத்து நின்றது.

                             (2)

இந்த நொடியில்
உந்தன் சிந்தையில்
ஓடும் எண்ணம்
என்னவென்று கூறடி
எனதன்பு தோழி !

என் சிந்தை முழுவதும்
சிறைப்பட்டுக் கிடப்பதால்
எண்ணம் எதற்கும்
இடம் இல்லையே தோழி !

இந்தக் கணத்தில்
உன் கண்ணில் 
ஆடும் காட்சி
என்னவென்று  இயம்படி 
என் இனிய தோழி !

என் விழி இரண்டும் 
இமை மூடி நிற்பதால் 
காட்சி எதையும் 
காணவில்லையே தோழி !
                    
                   (3)
சுற்றிலும் நடப்பதில் 
பற்றின்றி உலகை
மறப்பதும் ஏனோ?
ஊன் உறக்கம்
துறப்பதும் ஏனோ ?
கூறடி இனியவளே !

உன் வினாவுக்கு
விடை தருவேன்
எனதருமை
சிநேகிதியே !

நேச மழையில்
நனைந்தேன்
பாச வலையில்
விழுந்தேன்
இதயத்துக்குள்
சிறைப்பட்டேன்
அன்புக் கோட்டைக்குள்
அடைபட்டேன்
ஆதரவு அரணால்
சூழப்பட்டேன்
அரவணைப்பு சங்கிலியால்
பிணைக்கப்பட்டேன்

நினைவேதும் இல்லாமல்
கனவில் மிதக்கின்றேன்
கற்பனை உலகில்
உலவுகிறேன்


                      (4)
தோழி:
இதயத்தை இழந்தேன்
என்பவளே ! அதை
இழந்ததெப்படி  என
நினைவுபடுத்திக் கூறடி !
அது எடுததுக்கொள்ளப்பட்டதா
அல்லது நீயே 
கொடுத்துவிட்டாயா?

தலைவி: 
என்ன நடந்ததென்று
எனக்கே தெரியவில்ல
பறித்துச் செல்லப்பட்டதா
அல்லது நானே கொடுத்தேனா
என அறுதியிட்டுக் கூற
என்னால் இயலவில்லையே
என் செய்வேன் தோழி !